தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலவரங்களை தூண்டுபவர் திருமா - பாமக நிறுவனர் குற்றச்சாட்டு

அரியலூர்: இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய தலைவரே அவர்களை தூண்டிவிட்டு தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக திருமாவளவன் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Ramdoss

By

Published : Mar 27, 2019, 9:32 AM IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது கூறியதாவது, சிதம்பரம் தொகுதி மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் நான் சொல்வது என்னவென்றால், நானே இந்த தேர்தலில் நிற்பதாக நினைத்து எங்கள் கூட்டணி வேட்பாளர் சந்திரசேகரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

தலைவர் என்பவர் தம்மை நம்பி வரும் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை வழிநடத்தும் சிறந்த ஆசானாக இருக்க வேண்டும். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் பெண்கள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு அருவருக்கதக்க வார்த்தைகளை பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இளைஞர்களை நல்வழிப்படுத்தாமல் ,அவர்களை தூண்டிவிட்டு தவறான பாதைககு அழைத்து செல்கிறார்.

மேலும் கொள்கையில்லாத கட்டபஞ்சாயத்து செய்கின்ற கட்சி நாட்டுக்கு தேவையற்றது. எனவே அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டியது மக்களின் கடமையாகும். ஆகவே இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு சிதம்பர தொகுதி வாக்காளர்கள் கொடுக்கும் பரிசு டெபாசிட் இழக்க செய்வதேயாகும். அதனை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details