அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் மூர்த்தி. இவரின் மகன் பாக்கியராஜ். இவர் 2003ஆம் ஆண்டு நாட்டின் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். டெல்லியில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்படைந்துள்ளது.
அரியலூரில் ராணுவ வீரரின் உடலுக்கு எஸ்.பி. மரியாதை! - police commisioner pays condolence to army officer
அரியலூர்: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான வெற்றியூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த ராணுவ வீரர் பாக்கியராஜுக்கு தீபா என்ற மனைவியும், தியா (7) என்ற மகளும், புகழ்மாறன் (2) என்ற மகனும் உள்ளனர். 10 நாட்கள் விடுப்பில் ஊருக்கு வந்திருந்த பாக்கியராஜ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்து விட்டு ஓரிரு நாட்கள் கழித்து டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.