கொலை வழக்கில் திமுக பிரமுகர் மகன் உள்ளிட்ட 6 பேர் கைது - மகன்
அரியலூர்: சரண்ராஜ் என்பவர் கொலை வழக்கில், திமுக ஒன்றிய செயலாளர் மகன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் ஏழாம் தேதி இரவு கள்ளூர் கிராமத்திற்குச் சென்று திரும்பிய போது, கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது முன்விரோதத்தால் நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த கீழப்பழுவூர் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல் மகன் பூவரசன், சூர்யா, முத்து என்கின்ற ராஜபாண்டி, அஜித், மணிகண்டன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.