அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் பிறப்பகுதிகளில் இருந்து வருபவர்களால்தான் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
இ-பாஸ் இல்லாமல் ஊருக்குள் நுழையும் வெளிமாவட்டத்தினர் - பீதியில் அரியலூர் மக்கள்
அரியலூர்: மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால், இ-பாஸ் இல்லாமல் ஊருக்குள் வரும் பொதுமக்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (ஜூன் 25) முதல் அந்தந்த மாவட்ட எல்லைகளை மூட உத்திரவிட்டுள்ளது. மாவட்ட எல்லையில் உயர்மட்ட கோபுரம் அமைத்தும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபடாததால் பிற மாவட்டத்திலிருந்து கார், லாரிகள், இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் இ-பாஸ் இல்லாமல் நகருக்குள் சுலபமாக வந்து செல்கின்றனர்.
இதனால், அரியலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.