ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதனையொட்டி அரியலூர் நகராட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம் மற்றும் கண்காட்சியினை அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.
அரியலூரில் கொண்டாடப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மாத விழா!
அரியலூர்: ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனத்தை அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழா
பின்னர் கர்ப்பிணிப் பெண்கள், கருவுற்றத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அவசியம் குறித்து எடுத்துக் கூறினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா எந்தெந்தப் பொருள்களில் ஊட்டச்சத்து உள்ளது என்பது பற்றியும், அதனை எடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் கூறினார்.
மேலும் கலந்துகொண்ட அனைத்து கருவுற்றப் பெண்கள், மகப்பேறு அடைந்தவர்களுக்கும் சத்துமாவு, முட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக் கையொப்பமிட்டனர்.