தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் காந்தி மார்கெட் இடமாற்றம் - வியாபாரிகள் அதிருப்தி

அரியலூர்: கரோனா தொற்று நடவடிக்கை காரணமாக காந்தி மார்க்கெட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டதால் வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

market
market

By

Published : Mar 28, 2020, 9:32 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொற்றால் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடான விதிகளை கடைப்பிடிக்க மக்களுக்கு அரசு வலியுறுத்தி வருகிறது.

அந்தவகையில், அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காந்தி மார்கெட் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அரசு மேல்நிலைப்பள்ளியில் மண் தரையில் அமர்ந்து வெயிலின் உச்ச நிலை தாங்க முடியாமல் வியாபாரிகள் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதகிள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. 40 ரூபாய்க்கு விற்ற உருளைக் கிழங்கு 60 ரூபாய்க்கும், மாங்காய் 80 ரூபாய்க்கும், முருங்கைகாய் 100 ரூபாய்க்கும் விற்பனையாவதாக பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: கிருமி நாசினி தெளித்த சட்டப்பேரவை உறுப்பினர்

ABOUT THE AUTHOR

...view details