தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் ஏரி தூர்வாரும் பணி: அரசு தலைமை கொறடா ஆய்வு

அரியலூர்: ஐயப்பன் ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

lake inspectiin
lake inspectiin

By

Published : Feb 9, 2020, 8:04 PM IST

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஐயப்பன் ஏரியை தூர்வாரி அழகுபடுத்தும் மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஏரியில் மழைக்காலங்களில் சேகரிக்கும் மழைநீரை சுற்றுப்புற மக்கள் குளிப்பதற்கும் துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஏரியானது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுகிறது.

இந்த ஏரியில் சுமார் 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரையை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, ஏரிகளைச் சுற்றி வருவதற்கான நடைபாதை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இவற்றை ஆய்வு செய்த தாமரை ராஜேந்திரன், இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டார்.

அரசு தலைமை கொறடா ஆய்வு

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சந்திரசேகர், தாமரைக் குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அரசு தலைமை மருத்துவமனையில் பொதுசுகாதாரத் துறை இயக்குநர் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details