அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவர் மனைவி ஜோதி வயது 40. கணவரை இழந்த இவர் மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தனது மகள் சந்திரலேகாவுடன் கறவை மாடுகள் வளர்த்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கறவை மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு வீட்டின் முன்பு இருந்த அன்னக்கூடையை எடுக்கச் சென்றுள்ளார். வீட்டுற்கு வரும் மின்இணைப்பிற்கான வயர் அறுந்து அன்னக்கூடையில் கிடந்ததுள்ளது. இதனை கவனிக்காமல் அன்னக்கூடையை ஜோதி எடுத்தபோது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.