அரியலூர், ஆண்டிமடம் ஆகிய இரு இடங்களிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அரியலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், வெல்டர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகளில் 284 மாணவர்களுக்கு சேர்க்கை இடம் உள்ளது. இதை போன்ற ஆண்டிமடம் தொழில் பயிற்சி நிலையத்தில் 240 இடங்கள் உள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றுடன் சான்றிதழ் பதிவு முடிவு
அரியலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் பதிவு செய்யும் பணி இன்றுடன் (செப். 16) முடிவடைகிறது.
Government industrial training institute Certificate Registration
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை சான்றிதழ்கள் பதிவு செய்யும் பணி இன்றுடன் (செப். 16) நிறைவு பெற உள்ளது. இதில் மாணவர்களிடமிருந்து மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவை சரிபார்த்து பதிவு செய்யப்படுகின்றன. அதேசமயம் மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறுமென தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்தார்.