தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்

அரியலூர்: உயர்த்திய ஊதியத்தை வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Contract cleaning staff
Contract cleaning staff

By

Published : Nov 6, 2020, 5:00 PM IST

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக 120 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ. 237 வழங்கப்பட்டுவருகிறது.

இது தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 347ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட இந்த ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை எனவும், பி.எஃப். பணம் இன்னும் தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கரோனா காலத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியும் தங்களுக்கு உயர்த்திய சம்பளத்தை வழங்காதது மனவேதனை அளிக்கிறது. தங்களுக்காக ஒப்பந்ததாரரிடம் கேள்வியெழுப்பிய மேற்பார்வையாளரை பணிநீக்கம் செய்தது கண்டிக்கதக்கது என வலியுறுத்தியும் 20 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும் எனவும் அப்போது கோரிக்கை விடுத்துனர்.

இதனையடுத்து அவர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details