தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுமை மண்டலத்திற்குத் தயாராகும் அரியலூர்!

அரியலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 355 நபர்களில் 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அரியலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து வெளியேறியுள்ளது.

கரோனா இல்லாத மாவட்டமாக மாறிய அரியலூர்
கரோனா இல்லாத மாவட்டமாக மாறிய அரியலூர்

By

Published : May 23, 2020, 1:33 PM IST

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் நேற்றுவரை 355 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும் தங்கவைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்குச் சத்தான உணவுகள், கபசுரக் குடிநீர் என அரசு வழிகாட்டுதலின்படி உணவுகள் வழங்கப்பட்டன.

இதனால், 355 கரோனா நோயாளிகளில் 350 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போது ஐந்து நபர்கள் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதன்மூலம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த அரியலூர் கரோனா தொற்று இல்லா மாவட்டமாக மாற உள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய பெண் பயிற்சி காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details