தமிழ்நாடு

tamil nadu

அடகுக் கடையில் 100 சரவன் தங்க நகைகள் கொள்ளை - காவல் துறையினர் விசாரணை

By

Published : Nov 24, 2019, 11:45 AM IST

Updated : Nov 24, 2019, 7:30 PM IST

அரியலூர்: திருமழப்பாடி பகுதியில் நகை அடகுக் கடையின் பூட்டை உடைத்து, 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நடந்த அடகு கடை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டி விட்டு, வீட்டிற்குச் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 100 சரவன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலையில் அந்தப் பகுதியில் சென்றவர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிவக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த சிவக்குமார் கடையைத் திறந்து பார்த்த போது, லாக்கரில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

கொள்ளை நடந்த அடகு கடை

உடனே இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்ற காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையும் படிங்க:திருத்துறைப்பூண்டியில் ஓய்வு பெற்ற அலுவலரிடம் 18 சவரன் கொள்ளை!

Last Updated : Nov 24, 2019, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details