தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Paralympics: பவினாபென் படேல் ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேற்றம் - டேபில் டென்னிஸ் வீராங்கனை பவினாபென்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 26) பிரிட்டனின் மேகன் ஷாக்லெட்டானை வென்று இந்திய டேபில் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.

Paddler Bhavinaben
Paddler Bhavinaben

By

Published : Aug 26, 2021, 12:57 PM IST

Updated : Aug 26, 2021, 2:20 PM IST

டோக்கியோ:மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான இன்று டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில், உலகத் தரவரிசைப் பட்டியலில் 12ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பிரிட்டன் வீராங்கனையை எதிர்த்து களமிறங்கினார்.

மொத்தமாக 41 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 11-7 9-11 17-15 13-11 என்ற கணக்கில் பவினாபென் வென்று அசத்தினார். அதன்படி மொத்தமாக 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக, நேற்று பவினாபென் படேல் 0-3 என்ற கணக்கில் சீனா வீராங்கனையிடம் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Tokyo Paralympics: டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஏமாற்றம்!

Last Updated : Aug 26, 2021, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details