டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது.
இந்நிலையில் வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பு ஆதிக்க சாதியை சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் வெட்கக் கேடானது என அணியின் கேப்டன் ராணி ராம்பால் கண்டித்துள்ளார். இது குறித்து காணொலி வாயிலான சந்திப்பில் அவர் கூறுகையில், “இது மிகவும் மோசமான விஷயம். நாங்கள் எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த மிகவும் கடினமாக உழைக்கிறோம். மதம், சாதி பாகுபாடு போன்ற எல்லாவற்றையும் நிறுத்துங்கள், ஏனென்றால் நாங்கள் இவை அனைத்தையும் விட அதிகமாக உழைக்கிறோம்.
மேலும், நாங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறோம், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறோம். ஆனால் நாங்கள் இங்கு வரும்போது இந்தியாவிற்காக ஒன்றாக வேலை செய்கிறோம்.
நாங்கள் பதக்கம் வெல்லாவிட்டாலும், எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவை ஒரு ஹாக்கி நாடாக மாற்ற விரும்பினால், எங்களுக்கு அனைவரும் தேவை” என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி நான்காவது இடமும், ஆடவர் அணி 3ஆவது இடமும் பெற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர், மகளிர் என அரையிறுதிக்கு சென்ற ஒரே நாடு இந்தியா என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கண்ணீர் சிந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் ஆறுதல்!