கனாடாவில் நடைபெற்றுவரும் ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் 16ஆவது சுற்றில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால், அர்ஜெண்டினாவின் கைடோ பெல்லாவை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதன்பின் இராண்டாவது சுற்றில் போராடிய பெல்லா, நடாலின் அசாத்திய ஆட்டத்தினால் 4-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் இழந்தார்.
ரஃபெல் நடால் vs கைடோ பெல்லா இதன் மூலம் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் பெல்லாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் ரஃபேல் நடால்.
இதன்பின் அவர் கூறியதாவது, "காற்றைப் பொறுத்தவரை இது ஒரு கடினமான நாள். ஆனால் நாங்கள் இப்படி விளையாட பழகிவிட்டோம். அதே நேரத்தில், கடினமான சூழ்நிலையில் விளையாடுவது அழகாக இருக்கிறது. ஏனென்றால், விளையாடுவதற்கு வெவ்வேறு விருப்பங்களைக் கொண்ட வீரருக்கு இந்த வகையான நாட்களில் விளையாட சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இது நிலை மற்றும் மனரீதியாக விளையாட்டில் கவனம் செலுத்துவதாகும்"என்று ரஃபேல் நடால் கூறினார்.