தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 11, 2019, 10:47 AM IST

ETV Bharat / sports

ஸ்டீஃபன்ஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய கிகி பெர்டன்ஸ்!

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டீஃபன்ஸை வீழ்த்தி கிகி பெர்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மாட்ரிட்

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துவீராங்கனை கிகி பெர்டன்ஸை எதிர்த்து அமெரிக்காவின் ஸ்டீஃபன்ஸ் விளையாடினார்.

சமபலத்துடன் இருக்கும் இரு வீராங்கனைகள் மோதிய இப்போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கியது முதலே யாரும் எதிர்பாராத வகையில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட பெர்டன்ஸ் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஸ்டீஃபன்ஸ்

பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பெர்டன்ஸின் அட்டகாசமான ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ஸ்டீஃபன்ஸ் திணறினார். பின்னர் இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றி நெதர்லாந்த வீராங்கனை கிகி பெர்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கிகி பெர்டன்ஸ்

மேலும் இறுதிப் போட்டியில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பை எதிர்த்து கிகி பெர்டன்ஸ் ஆடவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details