கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. 172 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசால் இதுவரை 4,38,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமில்லாமல் 19, 675 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கிவருகின்றனர். அந்தவகையில், சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அந்நாட்டு நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ஒரு மில்லியன் சுவிஸ் பிரான்க் (இந்திய மதிப்பில் ரூ. 7 கோடியே 90 லட்சம்) நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "இது அனைவருக்கும் சவாலான நேரம். இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை. இந்தத் தருணத்தில் நானும் எனது மனைவி மார்காவும் சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் பிரான்க் நிதியுதவி அளிக்கவுள்ளோம். எங்களது பங்களிப்பு ஒரு சிறிய தொடக்கம்தான். நிச்சயம் இந்தப் பங்களிப்பில் பலரும் இணைவார்கள் என நம்புகிறேன். அனைவரும் ஆரோக்கியத்துடன் இருங்கள். நாம் ஒன்றினைந்தால் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவரலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கோவிட்-19: ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி அளித்த மெஸ்ஸி!