தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 15, 2020, 5:55 PM IST

ETV Bharat / sports

ஆஸ்திரேலிய ஓபன் ஏற்பாட்டாளர்களை திட்டிய டென்னிஸ் வீராங்கனை!

மெல்போர்ன்: குவாலிஃபயர் போட்டியின் இடையிலேயே வீராங்கனை தலீலாவுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து டென்னிஸ் வீராங்கனை தலீலா ஜகுபோவிக் ஆஸ்திரேலிய ஓபன் ஏற்பாட்டாளர்களை திட்டியுள்ளார்.

dalila-jakupovic-hits-out-at-australian-open-organisers-for-failing-to-take-care-of-players
dalila-jakupovic-hits-out-at-australian-open-organisers-for-failing-to-take-care-of-players

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் குவாலிஃபயர் சுற்று மெல்போர்னில் நடந்துவருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்லோவேனியாவின் தலீலாவை எதிர்த்து சுவிஸ் நாட்டின் ஸ்டிஃபானே ஆடினார்.

இந்தப் போட்டியின் இரண்டாவது செட் ஆட்டத்தின்போது, வீராங்கனை தலீலாவுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 6-4, 5-6 என்ற நிலையில், தலீலா விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனைஙத தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து தலீலா வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து தலீலா பேசுகையில், '' ஆஸ்திரேலிய ஓபன் ஏற்பாட்டாளர்களால் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களின் உடல்நிலைக்கு அவர்கள் தான் பொறுப்பேற்கவேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்றபின் சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஏற்பாட்டாளர்களின் உறுதிமொழியையடுத்து தான் அனைத்து வீரர்களும் டென்னிஸ் ஆடவந்துள்ளனர். ஆனால் இங்கே காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது. இதற்கு முன்னதாக காற்று மாசு அதிகமுள்ள நாடுகளான சீனா உள்ளிட்ட நாடுகளில் விளையாடியுள்ளோம். ஆனால் இங்கே வேறு நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உக்ரேனிய வீராங்கனை ஸ்விடோலினா தனது ட்விட்டர் பக்கத்தில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே சீசனில் ரூ.6,000 கோடி வருவாய் - பார்சிலோனா சாதனை!

ABOUT THE AUTHOR

...view details