2019-ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இப்போட்டியில் இவர் 251.7 புள்ளிகளை பெற்று தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தங்களது மகளின் இந்த சாதனையை இளவேனிலின் தந்தை வாலறிவன் மற்றும் தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இளவேனிலின் தந்தை வாலறிவன், இளவேனில் தனது 13 வயது முதலே துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் மிகுந்தவராகவும், கடந்த 8 ஆண்டுகளாக அவர் இந்த போட்டியை விளையாடி வருவதாகவும், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே அவர் குஜராத்திலுள்ள விளையாட்டு பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றதாகவும் பெருமையோடு நினைவு கூறினார். தற்போது அவர் இந்தியாவிற்கே பெருமை சேர்த்து விட்டதாகவும், அவரை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இளவேனிலின் தந்தை வாலறிவன் தொடர்ந்து பேசிய இளவேனிலின் தாத்தா உருத்திராபதி, சிறு வயது முதலே விளையாட்டு துறையில் ஆர்வமிகுதியுடன் இருக்கும் தங்களது பேத்தி, தினமும் தங்களிடம் தான் உங்களுக்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்த்து தருவேன் என கூறுவாள் என்று பெருமையோடு தெரிவித்தார். வருகின்ற ஒலிம்பிக் விளையாட்டிலும் இளவேனில் தங்கம் வென்றால் போதும், அதைவிட தங்களுக்கு மகிழ்ச்சி கரமான செய்தி வேறு ஏதுமில்லை என தெரிவித்தார்.
இளவேனிலின் பாட்டி கிருஷ்ணவேணி