தமிழ்நாடு

tamil nadu

புழுதியைக் கிழித்துக்கொண்டு பறந்த ரேஸ் கார்கள் - வெற்றிவாகை சூடிய கிறிஸ் மீக்!

By

Published : Sep 12, 2019, 10:27 PM IST

2019ஆம் ஆண்டுக்கான டர்க்கி ராலி கார் பந்தயப் பயிற்சி போட்டியில் டொயோடா அணி வீரர் கிறிஸ் மீக் முதலிடம் பிடித்தார்.

கிறிஸ் மீக்

2019ஆம் ஆண்டுக்கான டர்க்கி ராலி கார் பந்தயப் போட்டிக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளில் டொயோடா அணியைச் சேர்ந்த கிறிஸ் மீக் என்ற வீரர் கடினமான கரடு முரடான பாதையில் புழுதியைக் கிழித்துக்கொண்டு 3 நிமிடங்கள் 25.3 விநாடிகளில் காரில் செய்த வித்தைகள் மற்ற அணியினரைக் கடந்து முதலிடம் பிடிக்க வைத்தது.

வெற்றிவாகை சூடிய கிறிஸ் மீக்

இதுகுறித்து பேசிய கிறிஸ் மீக், ரேஸ் பாதைகள் மிகவும் கரடு முரடாக உள்ளது என்பது தெரிந்த ஒன்று தான். தூசிகள் ஒருபோதும் பிரச்னைகளாக இல்லை. இங்கே இருக்கும் தட்ப வெட்ப நிலை தான் அனைவருக்கும் பழக சிரமாக உள்ளது என்றார்.

இரண்டாம் இடத்தில் ஹூம்டாய் ஐ20 அணியைச் சேர்ந்த ஆண்ட்ரியஸ், மூன்றாம் இடத்தில் அதே அணியைச் சேர்ந்த தியரி என அடுத்தது வந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details