தமிழ்நாடு

tamil nadu

பாஜகவில் பிரபல மல்யுத்த வீராங்கனை

By

Published : Aug 12, 2019, 7:26 PM IST

டெல்லி: நட்சத்திர மல்யுத்த வீராங்கனையான பபிதா போகத் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் பிரபல மல்யுத்த வீராங்கனை

ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் மஹாவீர் போகத். முன்னாள் மல்யுத்த வீரரான இவருக்கு கீதா போகத், பபிதா போகத், ரித்து போகத் என மூன்று மகள்கள் உள்ளனர். தனது பயிற்சியின் மூலம் மூவரையும் சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் நட்சத்தி வீராங்கனையாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரைவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இச்சூழலில் பபிதா போகத், அவரது தந்தை மஹாவீர் போகத் ஆகியோர் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பாஜவில் இணைந்த பபிதா போகத், மஹாவிர் போகத்

பாஜகவில் இணைந்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த பபிதா போகத், " 2014இல் இருந்தே நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை. நாட்டின் வளர்ச்சிக்காக அவர் அயராது உழைத்துவருகிறார். என்னை பொறுத்தவரையில், அனைவரும் பாஜவில் சேர விரும்புகிறார்கள் என்று கருதுகிறேன்" என்றார்.

துரோனாச்சார்யா விருது வென்ற அவரது தந்தை மஹாவீர் போகத், ஜனநாயக் ஜனதா கட்சியில் இருந்து, தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அவர், "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாஜக சிறப்பாக செயல்பட்டது” என்றார். 2014, 2018 காமென்வெல்த் போட்டிகளில் பபிதா போகத் தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details