தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

23 வயதுக்குள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை - பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை

புடாபெஸ்ட்: 23 வயதுக்குள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

pooja

By

Published : Nov 1, 2019, 1:23 PM IST

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 23 வயதுக்குள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் மகளிர் 53 எடைப்பிரிவில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்த இந்திய வீராங்கனை பூஜா கெலாட் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் துருக்கியின் ஜெனெப் யெட்கில்லை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் தொடக்கத்தில் 2-4 என பின்தங்கியிருந்த பூஜா, பின்னர் தனது அபார ஆட்டத்தின் மூலமாக 8-4 என்ற கணக்கில் துருக்கி வீராங்கனையை வீழ்த்தினார். பூஜா இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஹருன்னா ஹோக்குனோவை எதிர்கொள்கிறார்.

முன்னதாக ஆடவர் 61 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் கிர்கிஸ்தான் வீரரிடம் தோல்வியுற்ற இந்திய வீரர் ரவீந்தர் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது பூஜா கெலாட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் இந்திய அணிக்கு இரண்டாவது பதக்கம் உறுதியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details