தமிழ்நாடு

tamil nadu

#PKL: சொந்த மண்ணில் கெத்துக் காட்டிய தபாங் டெல்லி

By

Published : Aug 29, 2019, 3:32 AM IST

டெல்லி: புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய போட்டியில் தபாங் டெல்லி அணி 40-24 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.

pkl-dabang-delhi-scripted-huge-win-over-u-mumba-in-their-home-ground

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று டெல்லியில் நடைபெற்ற 63ஆவது லீக் போட்டியில் தபாங் டெல்லி, யு மும்பா அணியை எதிர்கொண்டது.

முதல் பாதி போட்டியில் யு மும்பா அணி சிறப்பாக விளையாடியது. இதனால், 14-11 என்ற கணக்கில் யு மும்பா அணி முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக, டெல்லி அணியின் ஸ்ட்ரைக்கர் நவின் குமார், ரைய்டிங்கில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார்.

இதனால், தபாங் டெல்லி அணி 40-24 என்ற கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின்மூலம் டெல்லி அணி 10 போட்டிகளில் 8 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 44 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 41-25 என்ற கணக்கில் ஃபார்டியுன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details