ஹாங்சோ:பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 24 தங்கம், 29 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 96 பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. 434 பதக்கங்களைப் பெற்று முதல் இடத்தில் சீனாவும், 108 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் ஈரானும், 120 பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகளும் உள்ளன.
பேட்மிண்டன்: பாரா ஆசிய பேட்மிண்டன் போட்டியில் SL4 பிரிவில் சுகாஸ் எத்திராஜ் தங்கம் வென்று உள்ளார். SH6 பிரிவில் கிருஷ்ண நாகர் வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளார். SL3 பிரிவில் பிரமோத் பகாத் தங்கமும், SL3 பிரிவில் நிதிஷ் வெள்ளி வென்று உள்ளனர்.
மகளிருக்கான SU5 பிரிவில் துளசிமதி முருகேசன் தங்கம் வென்று உள்ளார். இருவர் விளையாடும் மகளிருக்கான SL3 - SU5 பிரிவில் மானாசி ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் ஜோடி இருவரும் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளனர்.
இரண்டு பேர் கொண்ட பேட்மிண்டன் போட்டியில் SL3-SL4 பிரிவில் தருண் மற்றும் நிதிஷ்குமார் ஜோடி தங்கம் வென்று உள்ளனர். SU5 பிரிவில் ராஜ் குமார் மற்றும் சீராக் ஜோடி இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளனர்.