சேக் குடியரசில் நடைபெற்ற அத்லெடிக் மிட்னிக் ரைட்டர்(athletics mitnick reiter) தடகள போட்டிகளில், 300 மீட்டர் ஓட்டத்தை 32.41 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை இந்தியாவின் தடகள வீரர் முஹமது அனாஸ் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு தடகள வீரரான நிர்மல் டாம், 300 மீ ஓட்டத்தை 33.03 வினாடியில் கடந்து மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தடகளத்தில் தங்கம் வென்று முஹமது அனாஸ் சாதனை!
டெல்லி: இந்தியாவின் தடகள வீரர் முஹமது அனாஸ், செக் குடியரசில் நடைபெற்ற 300 மீட்டர் ஓட்டத்தை 32.41 வினாடியில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்த தகவலை இந்திய விளையாட்டுத்துறை கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் “செக் குடியரசில் நடைபெற்ற 300 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 32.41 வினாடியில் கடந்து முஹமது அனாஸ் தங்கம் வென்றுள்ளார். மேலும் நிர்மல் டாம் 33.03 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளது.
இதற்கு முன், 200 மீட்டர் ஓட்டத்தை அனாஸ் 21.18 வினாடியில் கடந்து தேசிய சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்திய விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.