தமிழ்நாடு

tamil nadu

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை: தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

இன்று (மார்ச் 27) நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் தங்கப் பதக்கப் போட்டியில் விஜயவீர் சித்து, தேஜஸ்வினி ஆகியோர் குர்பிரீத் சிங், அபுத்னியா பாட்டீலை 9-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.

By

Published : Mar 27, 2021, 10:25 PM IST

Published : Mar 27, 2021, 10:25 PM IST

ISSF WC: Vijayveer Sidhu, Tejaswini win gold in 25m rapid fire pistol mixed team event
ISSF WC: Vijayveer Sidhu, Tejaswini win gold in 25m rapid fire pistol mixed team event

டெல்லி: டெல்லியில் நடைபெற்றுவரும் ஐ.எஸ்.எஸ்.எஃப். துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பையில் இந்தியாவின் 25 மீட்டர் ரேபிட் பயர் கலப்பு அணியினர் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் 18 வயது விஜயவீர் சித்து, 16 வயது தேஜஸ்வினி ஆகியோர் குர்பிரீத் சிங், அபுத்னியா பாட்டீலை 9-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.

நேற்று (மார்ச் 26) நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பையில் ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் துப்பாக்கிப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் விஜயவீர் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஐம்பது மீட்டர் ரைபிள் மூன்றாம் நிலை கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத், தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் தங்கம் வென்றனர். இதில் சுனிதி சவுகான், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.

வியாழக்கிழமை (மார்ச் 25), இந்தியாவின் 25 மீட்டர் பிஸ்டல் அணி, மனு பாக்கர், ரஹி சர்னோபத், சிங்கி யாதவ் ஆகியோரைக் கொண்டது. இறுதிப்போட்டியில் இந்திய அணி போலந்தை 17-7 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.

இந்திய மகளிர் ஐம்பது மீட்டர் ரைபிள் மூன்றாம் நிலை அணியில் அஞ்சும் மொட்கில், காயத்ரி நித்யானந்தம், ஸ்ரேயா சாக்சேனா ஆகியோர் அடங்குவர். இறுதிப் போட்டியில் அந்த அணி போலந்திடம் 43-47 என்ற கணக்கில் வெள்ளியை வென்றது.

இதையும் படிங்க:உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details