ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஜியான் நகரில் இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான இன்று ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரவு ஃப்ரீ ஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், முதல் நிலை வீரரும் இந்திய வீரருமான பஜ்ரங் பூனியா, கஜகஸ்தானின் சயத்பெக் ஒகசோவை (Sayatbek Okassov) எதிர்கொண்டார்.
தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா
ஜியான்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 12-7 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அவர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது முறையாக தங்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 2020இல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் இவர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, நடைபெற்ற 79 கிலோ எடைப்பிரவுக்கான ஃப்ரீ ஸ்டைல் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரவின் ராணா 3-2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கஜகஸ்தானின் உசர்பயேவை (UsserBayev) வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.