தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2019, 11:36 AM IST

Updated : Nov 5, 2019, 12:06 PM IST

ETV Bharat / sports

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சித்தார்த்தா பாபு...!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் சித்தார்த்தா பாபு, 2020ஆம் ஆண்டில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

As Courage Carve An Olympics Champion

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தார்த்தாபாபு. சிறுவயதிலிருந்தே கிக் - பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வளரிளம் பருவத்தில் தேசிய கராத்தே சாம்பியனாக உருவானார். மீடியா, அசோசியேஷன் என அனைத்தும் கொண்டாடியது. ஆனால் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிட்டது என சினிமாவில் கூறுவார்களே... அதேபோல் தான் சித்தார்த்தா பாபுவின் வாழ்க்கையும் ஒரேநாளில் மாறியது.

தனது நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தினால் கால்கள் செயலிழந்துவிட்டது. கராத்தேவிலிருந்து விலகவேண்டிய கட்டாயம். மருத்துவமனையில் இருந்து பல நாட்களாக என்ன செய்யலாம் என யோசிக்கையில், படிக்கலாம் என முடிவெடுக்கிறார். இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு கம்யூட்டர் படிப்பில் சேர்ந்து படிக்கிறார். படிப்பு முடிவடைகிறது. அதற்கான வேலையும் கிடைக்கிறது. ஆனால் சித்தார்த்தாவுக்கோ மனதில் நிறைவில்லை.

நம் நாட்டில் நமக்கு பிடித்த வேலையை செய்யவில்லை என்றால், சமூகத்திற்கு பிடித்த வேலையில் தள்ளிவிடுவார்கள். சித்தார்த்தா வேலையிலிருந்து விடுபட்டு, துப்பாக்கியை கையில் எடுக்கிறார்.

அதையடுத்து ஏராளமான போராட்டத்திற்குப் பிறகு இன்று பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்த பயணம், சித்தார்த்தாவுக்கு எளிதாக அமையவில்லை.

சிறுவயதிலேயே துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் இருந்தாலும், கிக் - பாக்ஸிங்கை தான் சித்தார்த்தா தேர்வு செய்தார். ஆனால் பொழுதுபோக்காக இருந்த துப்பாக்கிச்சுடுதல், தற்போது போட்டியாக மாறியுள்ளது.

சித்தார்த்தா பாபு

சுப்பாக்கிச் சுடுதல் போட்டிக்காக கேரள மாநிலம் இடுக்கியில் இருக்கும் ரைபிள் கிளப்பை அணுகும்போது, அவருக்கு கிளப்பில் சேர்த்துக்கொள்ள மறுக்கப்படுகிறது. இறுதியாக இடுக்கி ரைபிள் கிளப் அசோகியேஷனால் ஒரு சலுகை அளிக்கப்படுகிறது. அது என்னவென்றால், 5 புல்லட்கள் சுடவேண்டும். அதில் ஒன்று சரியான இலக்கை தாக்கினால், கிளப்-ல் இணையலாம் என்பதுதான் அந்த சலுகை.

சித்தார்த்தா பாபு

சித்தார்த்தாவோ ஐந்து புல்லட்களில் நான்கை சரியான இலக்கை தாக்குகிறார். கிளப்-ல் இணைத்துக்கொள்ளப்படுகிறார். அதையடுத்து கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு பதக்கம், தேசிய அளவில் சாம்பியன் என பதக்கங்களைக் குவிக்கிறார்.

சித்தார்த்தா பாபு சிறப்புப்பேட்டி

இறுதியாக தற்போது 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்தியாவில் 50 மீ ப்ரோன் ரைபிள் பிரிவில் சித்தார்த்தா பாபு பெயர் பதக்கப்பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்ப்போம்.

இதையும் படிங்க: மகன் கால்பந்தாட காரை விற்ற தந்தை - கனவை எட்டிப்பிடித்த கால்பந்து வீரனின் கதை!

Last Updated : Nov 5, 2019, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details