தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிரேட் பிரிட்டனைத் தொடர்ந்து நியூசியை வீழ்த்திய இந்தியா

ஆக்லாந்து: நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தியுள்ளது.

navneet-scores-twice-as-indian-eves-beat-new-zealand-3-0
navneet-scores-twice-as-indian-eves-beat-new-zealand-3-0

By

Published : Feb 5, 2020, 3:52 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து, கிரேட் பிரிட்டன் ஆகிய அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஹாக்கி தொடரில் விளையாடிவருகிறது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் கடைசிப் போட்டியில் இந்தியா மீண்டும் நியூசிலாந்து தேசிய அணியை எதிர்கொண்டது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி களமிறங்கியது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணி சிறப்பாக ஆடியது. அதில் இந்திய அணியின் நவ்னீத் கவுர் முதல் கோலை 45ஆவது நிமிடத்தில் அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இளம் வீராங்கனை ஷர்மிளா 54ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க, அதனைத்தொடர்ந்து மீண்டும் நவ்னீத் கவுர் 58ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோயர்ட் பேசுகையில், '' இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தப் போட்டியில் நாங்கள் மூன்று கோல்கள் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சுற்றுப்பயணம் எங்கள் அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், மேம்படுத்த வேண்டிய திறன்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள உதவியுள்ளது. அதற்கான பயிற்சிகளை நிச்சயம் செயல்படுத்துவோம்.

இந்தத் தொடரில் அதிக நேரம் பந்தினை பாஸ் செய்யாமல் இருப்பதால் ப்ரஷர் ஏற்படுகிறது. அதனால் பாஸ்களை வேகமாக செய்வதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும். அதேபோல் எங்களது தடுப்பாட்டத்தில் சிறிது கவனம் செலுத்தவேண்டும். ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு நான்கு வார பயிற்சி முகாம் உள்ளது. அதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்'' என்றார்.

இதையும் படிங்க: ரொனால்டோ உடைப்பதற்காகவே காத்திருக்கும் சாதனைகள்!

ABOUT THE AUTHOR

...view details