கரோனா வைரஸ் பாதிப்பால் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படாத நிலை உள்ளது. இதனால் இந்திய ஹாக்கி அணி கரோனச வைரஸ் சூழல் குறைந்ததற்கு பின் மார்ச் மாதம் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நடக்கவுள்ளது.
இதைப்பற்றி இந்திய ஹாக்கி வீரர் சுமித் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '' ஹாக்கி பயிற்சியை மீண்டும் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்திய ஹாக்கி ஆணையம், ஹாக்கி இந்தியா சார்பாக அனைத்து வீரர்களுக்கு பயோ பபுள் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முழுமையான நிலை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிந்துகொள்ள முடியும். அந்தத் தொடரில் எங்களின் ஆட்டம் பொறுத்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவோம்.
கடந்த ஜூன் மாதம் நடந்த எஃப்ஐஹெச் தொடர் இறுதிப் போட்டியின்போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவது பெரும் பயணமாக இருந்தது. மீண்டும் ஹாக்கி பயிற்சியைத் தொடங்கிய பின், இந்த ஆண்டு எஃப்ஐஹெச் தொடரில் சிறந்த இரண்டு அணிகளுக்கு எதிராக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது.