கால்பந்து உலகின் மிகவும் பிரபலமடைந்த நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பேனஷின் கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் முன்னிலை வீரராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்றினால் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தங்களது பொருளாதார நிலையை சரி செய்யும் வகையில் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும் ரசிகர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளன. அந்த வகையில் தற்போது பன்டெஸ்லிகா, லாலிகா உள்ளிட்ட கால்பந்து தொடர்களை பார்வையாளர்களின்றி நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து பேசிய மெஸ்ஸி, ஸ்பெய்னின் லாலிகா தொடர் பார்வையாளர்களின்றி நடைபெற இருப்பது ஒருபக்கம் வருத்தமளித்தாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இப்பெருந்தொற்று எங்களுக்கு(பார்சிலோனாவிற்கு) பயணளிக்கும் என நம்புகிறேன். ஆனால் நாங்கள் போட்டியின் போது எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே அது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லாலிகா லீக் கால்பந்து தொடர் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறுமென ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் ரசிகர்களின் பாதுகாப்பு அவசியம் என்பதால், ஒவ்வொரு தரப்பிலிருந்து 10 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்ற வழிமுறையையும் பின்பற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா இடைவெளிக்கு பின் பயிற்சியில் களமிறங்கிய கால்பந்து வீரர்கள்!