கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே பார்வையாளர்களின்றி ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடர் நடந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது லா லிகா கால்பந்து தொடரும் தொடங்கியுள்ளது.
லா லிகா ரிட்டன்ஸ் : ரியல் பெட்டிஸ் வீழ்த்திய செவில்லா - லாலிகா கால்பந்து தொடர்
லா லிகா கால்பந்து தொடர் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், ரியல் பெட்டீஸ் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் செவில்லா அணி வீழ்த்தியது.
மூன்று மாதங்களுக்கு பிறகு தொடங்கிய லா லிகா தொடரில் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்த்து செவில்லா அணி விளையாடியது. இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் செவில்லா அணி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி அந்த அணியின் லூகாஸ், ஆட்டத்தின் முதல் கோலை அடித்து செவில்லா அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த 6 நிமிடங்களில் செவில்லா அணியின் ஃபெர்னாண்டோ மீண்டும் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. ஆட்டத்தின் இறுதி வரை ரியஸ் பெட்டிஸ் அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காததால், செவில்லா அணி வெற்றிபெற்றது.