ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (Asian Football Confederation) சார்பில் நடத்தப்படும் 16 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதிப்போட்டிகளுக்கு வடகொரிய, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் முன்னேறின. இதில் முதலில் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் வடகொரிய அணி ஆஸ்திரேலிய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
#AFCU16Womens கால்பந்து: அரையிறுதியில் சீனாவை அசால்ட் செய்த ஜப்பான்
#AFCU16Women's: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் 16 வயதுக்குட்பட்ட மகளிருக்கான சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப்போட்டியில் சீன அணியை ஜப்பான் அணி வீழ்த்தியது.
மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஜப்பான் - சீன அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தது. அதன்பின் தொடங்கிய பிற்பாதி ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை ஹானோன் நிஷியோ கோல் அடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து 82ஆவது நிமிடத்தில் சப்ஸ்டிட்யூட்டாக களமிறங்கிய மற்றொரு ஜப்பான் வீராங்கனை மைக்கா ஹமானோ கோல் அடித்தார். பின்னர் இறுதிவரை சீன அணி ஒரு கோல் கூட அடிக்காததால் 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஜப்பான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அந்த அணி வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் வடகொரியாவை எதிர்கொள்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் அணி அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட ஃபிபா மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றது.