தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐ.எஸ்.எல். அரையிறுதியில் கோவாவுடன் மோதும் சென்னை!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் சென்னை - கோவா, பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

Goa to host Indian Super League 2019-20 final on March 14
Goa to host Indian Super League 2019-20 final on March 14

By

Published : Feb 26, 2020, 10:15 PM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கோவா, கொல்கத்தா, நடப்புச் சாம்பியன் பெங்களூரு, சென்னை ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, எஃப்சி கோவா அணியுடன் மோதவுள்ளது.

அதேசமயம், மார்ச் 1ஆம் பெங்களூரு எஃப்சி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, கோவா - சென்னை அணிகளுக்கு இடையிலான இரண்டாம் அரையிறுதிப் போட்டி மார்ச் 7இல் கோவாவில்நடைபெறவுள்ளது.

அதன்பின், மார்ச் 8ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இதில், அவே கோல் கணக்கில் வெற்றிபெறும் அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.எல். தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 14ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, 2015இல் கோவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணி, கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், சென்னை அணி மீண்டும் மூன்றாவது முறை ஐ.எஸ்.எல். கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:இந்தியப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மேக்ஸ்வேல்!

ABOUT THE AUTHOR

...view details