இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்செனல் அணி - ரேபிட் வியன்னா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
கடந்த சில மாதங்களாக கரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக நடைபெற்றுவந்த இபிஎல் தொடர், இன்று 2 ஆயிரம் பார்வையாளர்களுடன் நடைபெற்றது.
இப்போட்டியில் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த அர்செனல் அணிக்கு ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் அலெக்ஸாண்டரேவும், 17ஆவது நிமிடத்தில் பப்லோ மாரியும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் எடி அசத்தலான கோலை பதிவுசெய்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அர்செனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் ரேபிட் வியன்னா அணியின் கோயா கிடகாவா கோலடித்தார். அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் எமிலி ஸ்மித் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் அர்செனல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரேபிட் வியன்னா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்செனல் அணி 13 புள்ளிகளுடன் இபிஎல் புள்ளிப்பட்டியலில் 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:நடராஜன், சஹால் பந்துவீச்சில் சுருண்ட ஆஸி., இந்திய அணி அசத்தல் வெற்றி!