இது தொடர்பாத தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் கரோனா தாக்கம் குறையவில்லை.
2021 டி20 உலகக்கோப்பை அரபு அமீரகத்திற்கு மாற்றமா?
கராச்சி: அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2021 டி20 உலகக்கோப்பை கரோனா காரணமாக அரபு அமீரகத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
வாசிம் கான்
ஏற்கனவே கரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டன. அதேபோல கரோனா தாக்கம் தொடர்ந்தால், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2021 டி20 உலகக்கோப்பை போட்டிகளும் அரபு அமீரகத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது. அதையடுத்து ஆசிய கோப்பை 2021 ஜூன் மாதம் இலங்கையில் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மூன்று சுற்று கரோனா பரிசோதனை: வெஸ்ட் இண்டீஸ் VS நியூசிலாந்து டி20 தொடர்!