தமிழ்நாடு

tamil nadu

TNPL 2021 QUALIFIER 1: திருச்சி பந்துவீச்சு;  சேப்பாக் கில்லீஸ் அபாரம்

By

Published : Aug 10, 2021, 8:28 PM IST

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணி சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

TNPL 2021 QUALIFIER 1 CHENNAI VS TRICHY
TNPL 2021 QUALIFIER 1 CHENNAI VS TRICHY

சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (ஆக.8) நிறைவடைந்தது. லீக் போட்டிகளின் முடிவில் திருச்சி, சென்னை, திண்டுக்கல், கோவை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

சென்னை பேட்டிங்

இந்நிலையில், குவாலிஃபயர்-1 என்னும் இறுதிப்போட்டியின் தகுதிச்சுற்று போட்டியில் ரூபி திருச்சி வாரியார்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று (ஆக.10) மோதுகின்றன.

இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இதன்படி சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 73/2 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ்,நிதீஷ் ராஜகோபால், சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), மதிவண்ணன், பொய்யாமொழி, சுனில் சாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சோனு யாதவ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், மணிமாறன் சித்தார்த், ஜெகநாத் சீனிவாஸ், தேவ் ராகுல், எஸ்.ராதாகிருஷ்ணன்.

இதையும் படிங்க: விளையாட்டு வாழ்க்கையின் திருப்புமுனை எது? - நீரஜ் சோப்ரா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details