கராச்சி:வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஷாஹீன் அஃப்ரிடிக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் சிகிச்சை பெறுவதற்காக தொடரிலிருந்து விலகினார்.
இந்த காயம் குணமாக 6 வாரங்களாகும் அதுவரை ஓய்விலிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக பாகிஸ்தான் அணியின் வலது வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் அப்ரிடியின் விலகல் அந்நாட்டு அணிக்கு பின்னடைவை தரலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கரோனா காரணமாக 2019ஆம் ஆண்டிற்கு பிறகு நடக்காத ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணிகளை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு