தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: ஆர்சிபிக்கு மரண அடி; 92-க்கு ஆல்-அவுட்!

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகைளையும் இழந்து சுருண்டது

rcb, kkr
கொல்கத்தாவிடம் மீண்டும் உதை வாங்கியது ஆர்சிபி

By

Published : Sep 20, 2021, 10:01 PM IST

அபுதாபி:இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம்கட்டப் போட்டிகள் நேற்று (செப். 19) தொடங்கின. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பவர்பிளேயில் பதற்றம்

இந்நிலையில், 31 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று (செப். 20) மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, கொல்கத்தா அணியை பந்துவீச அழைத்தது.

அதையடுத்து, பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கொல்கத்தாவிற்கு முதல் ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார்.

அந்த ஓவரில் நான்கு ரன்கள் எடுக்கப்பட்டது. இரண்டாவது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணாவின் மூன்றாவது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் கோலியை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கி பிரசித் பதிலடி கொடுத்தார். பின்னர், கேப்டன் மோர்கன் பவர்பிளேயின் அடுத்த நான்கு ஓவர்களை வீச பெர்குசன், சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்.

வருணும் ரஸ்ஸலும்

தேவ்தத் படிக்கல் சில பவுண்டரிகளை பறக்கவிட்டார். அப்போது, பெர்குசன் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து, படிக்கல் 22 ரன்களில் நடையைக் கட்டினார். பலமாக காணப்பட்ட பெங்களூரு அணியின் மிடில் ஆர்டரை ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி ஜோடி சுக்கு நூறாக உடைத்தது.

ஒன்பதாவது ஓவரை வீசிய ரஸ்ஸல் கேஎஸ் பாரத்தை 16 ரன்களில் வெளியேற்ற, அதே ஓவரில் டி வில்லியர்ஸையும் கோல்டன் டக்-அவுட்டில் பெவிலியனுக்கு அனுப்பி மிரட்டினார்.

அதேபோல, வருண் சக்கரவர்த்தி மேக்ஸ்வெல், ஹசரங்கா ஆகியோரை அடுத்தடுத்து விக்கெட் எடுத்து நிலையில், 14ஆவது ஓவரில் சச்சின் பேபியின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதன்பின்னர், களமிறங்கிய ஜேமீசன் வருண் சக்கரவர்த்தியிடமே ரன்-அவுட்டானார். அதற்கடுத்து வந்த ஹர்ஷல் படேலின் விக்கெட்டை பெர்குசனும், சிராஜ் விக்கெட்டை ரஸ்ஸலும் கைப்பற்றி அசத்தினர்.

மிரட்டிய பந்துவீச்சு

இதனால், பெங்களூரு அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டைகளுயும் இழந்து 92 ரன்களையே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 3 விக்கெட்டையும், பெர்குசன் 2 விக்கெட்டையும், பிரசித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 13 ரன்களையும், ரஸ்ஸல் 3 ஓவர்களை வீசி 9 ரன்களையும் மட்டுமே கொடுத்தனர்.

இதற்கு முன், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இதே கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணி தனது குறைந்தப்பட்ச ஸ்கோரான 49 ரன்களை பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தினமும் 7,000 அடி நடந்தால் எமனும் அஞ்சுவான்

ABOUT THE AUTHOR

...view details