தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2021: மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த கெவின் பீட்டர்சன் விருப்பம்

லண்டன்: ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் செப்டம்பர் மாதத்தில் நடத்துங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

By

Published : May 9, 2021, 12:37 PM IST

Pietersen
Pietersen

கரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், கேகேஆர் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. வீரர்கள், அணி நிர்வாகத்தினருக்கு பயோ பபுல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதை தாண்டியும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என எண்ணுகிறேன்.

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு சிறிது இடைவெளி இருக்கிறது. அனைத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளின் முன்னணி வீரர்களும் இங்கிலாந்தில் இருப்பார்கள். இங்கிலாந்தில் செப்டம்பர் இறுதியில் அற்புதமாக இருக்கும். மான்செஸ்டர், லீட்ஸ், பிர்மிங்ஹாம் லண்டனின் இரு மைதானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறு நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களுக்கு ரசிகர்களை அனுமதிக்கவும் வாய்ப்பு உள்ளது. அற்புதமான சூழல் நிலவும். லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக டி20 ஆட்டத்தில் நான் விளையாடியுள்ளேன். அப்போது இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் வெளிநாட்டில் விளையாடுவது போன்று இருந்தது. அந்தளவுக்கு இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீர்ர்களுக்கு ஆதரவு இருக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details