தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2023, 7:24 PM IST

Updated : Apr 26, 2023, 10:48 PM IST

ETV Bharat / sports

RCB vs KKR: போராடும் பெங்களூரு வெற்றி வாகை சூடுமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 201 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 138 ரன்கள் உடன் ஆடி வருகிறது.

Today IPL match
இன்றைய ஐபிஎல் ஆட்டம்

பெங்களூரு: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியில் பெங்களூரு அணியில் டு பிளெஸ்ஸி விளையாடவில்லை.

இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 201 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இது வரையிலான 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து போராடி வருகிறது.

கொல்கத்தா அணி: வெங்கடேஷ் ஐயர், ஜெகதீசன், ஜேசன் ராய், சுனில் நரேன், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரசல், ரிங்கு சிங், டேவிட் வீஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

பெங்களூரு அணி: விராட் கோலி (கேப்டன்), சபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பிரபு தேசாய், ஹசரங்கா, டேவிட் வில்லே, வைசாக், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Last Updated : Apr 26, 2023, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details