அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று (ஏப்.29) மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, பாட் கம்மின்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்:ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, சிம்ரோன் ஹெட்மையர், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், லலித் யாதவ்
இதையும் படிங்க: IPL 2021 RR VS MI: மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!