தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2020, 4:21 PM IST

ETV Bharat / sports

மும்பையிடம் எடுபடுமா கெய்லின் அதிரடி ஆட்டம்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: MI eye to seal playoff berth in game vs deflIPL 2020: MI eye to seal playoff berth in game vs deflated KXIPated KXIP
IPL 2020: MI eye to seal playoff berth in game vs deflated KXIP

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில் நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

அதேசமயம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் எட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஆறு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனால் இனி வரும் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை இந்தியன்ஸ்

டி காக், ரோஹித், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கிரண் பொல்லார்ட் என அதிரடி வீரர்கள், தங்களது திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில், மும்பை அணி எதிரணிக்கு சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குயின்டன் டி காக்

ஒரு சில போட்டிகளில் சொதப்பிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால், எதிரணியினர் கடும் நெருக்கடியை சந்திப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மும்பை அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும், சிறுசிறு தவறுகளால் தொடர் தோல்விகளைச் சந்தித்தது. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ் கெய்ல்

இதற்கிடையில் ஒவ்வாமை காரணமாக, சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல், பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தின்போது களமிறங்கினார். தொடக்கத்தில் தடுமாற்றத்தைச் சந்தித்த கெய்ல், ஆட்டத்தின் முடிவில் அதிரடியை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தும் அசத்தினார். இதனால் இன்றைய போட்டியின்போதும் அவரது அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதேசமயம் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரான் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பெற்றுள்ளது, பாஞ்சாபிற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்து வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பந்துவீச்சில் முருகன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டலும், பிற பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால், இனி வரும் போட்டிகளில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தும்பட்சத்தில் பஞ்சாப் அணி வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்படும்.

உத்தேச அணி:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க:இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் அல்லது கொல்கத்தாவில் பிங்க் பால் டெஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details