தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

162 ரன்கள் வெற்றி இலக்கு...! வாழ்வா சாவா போராட்டத்தில் ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

By

Published : Apr 20, 2019, 6:32 PM IST

வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சு

இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இனி இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாட இருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் இவர்தான் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனான ரஹானே நன்றாக செயல்பட்டார். இருப்பினும் அணிக்கு புதிய உத்வேகம் தேவைப்படுவதால்தான் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் பின்னர் பேட்டிங் செய்த மும்பை அணி ஆட்டத்தின் ஆரம்ப முதலே தடுமாற்றத்தை சந்தித்தது.

டி காக் ஆட்டத்தின் போக்கை மாற்றி 47 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் அணி 44 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து ஆடிவருகிறது.

தற்போது, களத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் சஞ்சு சாம்சன்னும் உள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்தத் தருணத்தில், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு குழந்தைப் பிறந்துள்ளதால், இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details