தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டக் அவுட்டில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் வீரர்

ஜெய்ப்பூர்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஷ்டன் டர்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

டக் அவுட்டில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் வீரர்

By

Published : Apr 23, 2019, 10:47 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

இதில், டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரஹானே சதம் விளாசி இறுதிவரை நாட்அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது.

இதனிடையை, ராஜஸ்தான் வீரர் அஷ்டன் டர்னர் இப்போட்டியிலாவது ரன் அடிப்பார் என்று எதிர்பார்த்தால், இம்முறையும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஷாந்த் ஷர்மா வீசிய ஸ்லோயர் பந்தில், கவர் திசையில் இருந்த ரூதர்ஃபோர்டு இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம், டர்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார். முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்றுமுறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இவர் 6ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

மூன்றுமுறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியல்:

அசோக் டின்டா (2009-2011)

ராகுல் ஷர்மா (2012-2013)

கவுதம் கம்பீர் (2014)

ஷர்துல் தாக்கூர் (2017)

பவான் நெகி (2018-2019)

அஷ்டன் டர்னர் (2019)

டக் அவுட்டில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த அஷ்டன் டர்னரை, நெட்டிசன்கள் ஏஷ்டன் 'டக்'னர் என கலாய்த்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details