தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் வீச வேண்டாம்: இந்திய வீரர்களை எச்சரிக்கும் ஆஸி. பயிற்சியாளர்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளை வீச வேண்டாம் என இந்திய வீரர்களுக்கு ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

mcdonald-warns-indians-against-bouncing-out-smith
mcdonald-warns-indians-against-bouncing-out-smith

By

Published : Nov 23, 2020, 7:38 AM IST

2019-2020 கிரிக்கெட் சீசனில் நியூசிலாந்தின் வாக்னர் பவுன்சர் பந்துகள் மூலம் நான்கு முறை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளால் பிரச்னை உள்ளது என்று எதிரணியினர் கண்டுபிடித்தனர்.

இந்தப் பிரச்னை பற்றி ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பேசியுள்ளார். அதில், '' ஆஷஸ் தொடரின் போது ஆர்ச்சர் முதல்முதலாக சில பந்துகள் மூலம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் மூலம் பிரச்னை கொடுத்தார். ஆனாலும் ஸ்டீவ் ஸ்மித்தால் ரன்கள் சேர்க்க முடிந்தது. ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் அதிக ரன்களை சேர்த்து வருகிறார்.

எதிரணியினரும் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அது போதுமான அளவிற்கு பலனளிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஸ்டீவிற்கு பவுன்சர் வீச வேண்டும் என்றால் நிச்சயம் வீசலாம்.

ஏனென்றால் ஆஸி. ஒருநாள் தொடரின் போது இந்திய வீரர்கள் ஏற்கனவே பவுன்சர் வியூகத்தை முயற்சித்தனர். லெக் கல்லி, டீப் ஸ்கொயர், டீப் பகுதிகளில் ஃபீல்டர்களை நிற்க வைத்து பவுன்சர் முயன்றனர். ஆனால் அந்தத் தொடரில் 98 மற்றும் 131 ஆகிய ரன்களை அவர் எடுத்தார்.

அதனால் நிச்சயம் இம்முறையும் பவுன்சர் தாக்குதல்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பலனளிக்க போவதில்லை. இந்திய வீரர்களுக்கு எதிராக எப்போதும் ஸ்டீவ் அதிக ரன்களை எடுத்துள்ளார். அது இம்முறையும் தொடரும்'' என்றார்.

இதையும் படிங்க:எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராகவுள்ளேன் - ரோஹித் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details