தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 5:00 PM IST

Updated : Aug 28, 2023, 5:56 PM IST

ETV Bharat / sports

புள்ளி விவர புலி ஆகணுமா? சென்னை ஐஐடி தரும் சூப்பரான கல்வி வாய்ப்பு

IIT Madras Cricket analytics course: இந்திய தொழிநுட்ப கழகம் சென்னை (ஐஐடி மெட்ராஸ்) இன்குபேட்டட் நிறுவனமான ஜிஐடிஏஏவுடன் இணைந்து ஹவ்ஸாட் - கிரிக்ஸ்டாட்ஸ்? உலக பகுப்பாய்வு ஆராய்தல் என்ற பாடபிரிவை விளையாட்டு ஆர்வலர்களுக்கு நடத்துகிறது.

IIT Madras
ஐஐடி மெட்ராஸ்

சென்னை: இந்திய தொழிநுட்ப கழகம் சென்னை (ஐஐடி மெட்ராஸ்) இன்குபேட்டட் நிறுவனமான ஜிஐடிஏஏவுடன் இணைந்து ஹவ்ஸாட் - கிரிக்ஸ்டாட்ஸ்? உலக பகுப்பாய்வு ஆராய்தல் என்ற பாடபிரிவை விளையாட்டு ஆர்வலர்களுக்கு தொடங்கியுள்ளது. இந்த பாடப்பிரிவானது எட்டு வார கால அடிப்படையில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://digitalskills.pravartak.org.in -யில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கட்டணமாக ரூபாய் 10,000 + ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படுகிறது. இளநிலை பாடப்படிப்பு, முதுகலை பாடப்படிப்பு படித்தவர்கள் மற்றும் விளையாட்டின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிஜ உலக வழக்குகளை ஆய்வுகள் செய்வதன் மூலம் பங்கேற்பாளர்கள் விளையாட்டு பகுப்பாய்வு துறையை தெரிந்துகொள்வதே இந்த பாடப்பிரிவின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. விளையாட்டின் பகுப்பாய்வு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது, அதன் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய தொழில்துறை நிபுணர்களை அறிமுக படுத்தப்படும்.

இதையும் படிங்க:Neeraj Chopra : இந்த பதக்கம் இந்தியாவுக்கானது.... வரலாற்று நாயகன் நீரஜ் சோப்ரா!

இந்திய தொழிநுட்ப கழகத்தின் தரவு அறிவியல் துறையில் உள்ள கல்வியாளர்களை கொண்டு இந்த பாடப்பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்வமுள்ள விளையாட்டு தரவு ஆய்வாலர்கள் மற்றும் நுண்ணறிவுகளை பெறவும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் அணியின் வீரர்கள் செயல்திறனை மேம்படுத்தவும் திறன்மிக்க மாணவர்களை கொண்டு செய்வதே நோக்கமாகும்.

இது குறித்து இந்திய வீரரான ஹேமலதா டி தயாளன் கூறியதாவது; “இந்த கிரிக்கெட் ஆய்வுகள் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். இதன் மூலம் வீரர் எதில் கவனம் செலுத்த வேண்டும், எதில் அவரின் செய்ல்திறன் குறைவாக இருக்கின்றது என தெரிந்து கொண்டு அதை மேம்படுத்த உதவியாக இருக்கும். குறிப்பாக இது போன்ற ஆய்வுகள் பயிற்சியாளருக்கு வீரரை வழிநடத்துவதற்கு ஏதுவாக இருக்கும்” என்றார்.

ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி எம்.ஜே. சங்கர் ராமன், கூறியதாவது; “பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவரங்களை கற்று கொடுபதற்கு கிரிக்கெட் ஒரு சிறந்த வழியாகும். வீரர்களின் செய்ல்திறன், குழு உத்தியை மேம்படுத்துதல் மற்றும் காயம் ஏற்ப்படுதலை தவிர்பது ஆகியவையை இந்த புள்ளிவிவரங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் செயல்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க:Neeraj Chopra: "தங்க மகன்" நீரஜ் சோப்ர... கடந்து வந்த பாதைகள்!

Last Updated : Aug 28, 2023, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details