பெங்களூரு:2023 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடின.
இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, சுப்மன் கில் 51 ரன்களிலும், ரோகித் ஷர்மா 61 ரன்களிலும், விராட் கோலி 50 ரன்களிலும் மற்றும் கே.எல்.ராகுல் 102 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 128 ரன்களை குவித்தார். தற்போது இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 410 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே வெஸ்லி பாரேசி தனது விக்கெட்டை இழந்தார். நெதர்லாந்து அணி 47.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 250 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 45 ரன்களும், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் 45 ரன்களும் மற்றும் கொலின் அக்கர்மேன் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். இதனையடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் 11:ரோகித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
நெதர்லாந்து அணியின் பிளேயிங் 11:வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.