ஹைதராபாத்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து முகம்மது அசாருதீன் நீக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் மீது விதிமீறல் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களின் மீது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது அசாருதீனை, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார். மேலும், விசாரணை முடியும்வரை அவர் அடிப்படை பொறுப்பில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.
முகம்மது அசாருதீனுக்கு எதிராக 'ஷோ கேஸ்' நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், “சங்கத்தில் தங்களின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த விசாரணையின்போது சங்கத்தின் உயர்மட்ட குழு உங்களை இடைநீக்கம் செய்துள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பான விசாரணை நடைபெறும்வரை நீங்கள் சங்கத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் உயர்மட்ட குழு விடுத்துள்ள அறிக்கையில், “முகம்மது அசாருதீன் சங்கத்தின் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைக்கு எதிராக செயல்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மை லார்ட் வேணாம், மேடம் போதும்!