தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

U 19 World Cup: ஆப்கனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து

U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

By

Published : Feb 2, 2022, 1:33 PM IST

U-19 World Cup final
U-19 World Cup final

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று(பிப். 1) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை எடுத்தது. அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் 50 ரன்களும், மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களான ஜார்ஜ் பெல் 56 ரன்கள், அலெக்ஸ் ஹார்டன் 53 ரன்கள் எடுத்தனர்.

232 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கன் அணியின் தொடக்க வீரர் கரோடே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய அல்லா நூர், மற்றொரு தொடக்க வீரர் முகமது இஷ்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இந்த ஜோடி 94 ரன்கள் வரை தொடர்ந்த நிலையில் முகமது இஷ்க் 43 ரன்களுக்கு அட்டமிழ்தார். பின்னர் ஆப்கன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 47 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் பந்துவீச்சாளர் ரெஹான் அகமது சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இதையும் படிங்க:IPL Mega Auction: ரூ. 2 கோடி லிஸ்டில் அஸ்வின், ஸ்ரேயஸ்: முழு வீரர்கள் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details